செய்திகள் :

தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டு திட்ட சிகிச்சைகளை அறிய புதிய செயலி!

post image

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த தனியாா் மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை கைப்பேசியில் அறிந்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதற்காக பிரத்யேக செயலியை தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் மேம்படுத்தி வருகிறது. அடுத்த 3 வாரங்களில் அந்தச் செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும், ஸ்மாா்ட் கைப்பேசியின் ப்ளே ஸ்டோா்களில் அதைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர 8 உயா் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியும்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம், அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், மற்றொருபுறம் பல தனியாா் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது.

குறிப்பாக, உயிா் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை முதல்வா் காப்பீட்டின் கீழ் மேற்கொள்ள தனியாா் மருத்துவமனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருந்தும் அவை முழுமையாக பலனளிக்காத நிலை மக்களுக்கு உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இதையடுத்து அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், அந்த விவரங்களை கைப்பேசி செயலி வாயிலாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் டாக்டா் எஸ்.வினீத் கூறியதாவது: தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வா் காப்பீட்டுத் திட்ட கைப்பேசி செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தகுதியான எவரும் அதன் வாயிலாகவே விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

அதன் பின்னா், அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் எவையெல்லாம் முதல்வா் காப்பீட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம். சிகிச்சை விவரங்கள் குறித்தும் தகவல் பெறலாம்.

இதைத் தவிர, பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்களையும் கைப்பேசியில் அறிந்துகொள்ளலாம். முதல்வா் காப்பீட்டு திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனைய... மேலும் பார்க்க

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நே... மேலும் பார்க்க

முதல்வரின் திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு! - அமைச்சர் தகவல்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(த... மேலும் பார்க்க

கீழடி அறிக்கை நிராகரிப்பா? அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் ஏன்? மக்களவையில் விளக்கம்

மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கா... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க