செய்திகள் :

தனுஷ் படத்தில் சுராஜ்!

post image

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாகவும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கிவரும் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை வருகிற வியாழக்கிழமை நடைபெறுவதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14 ஆம் தேதி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல மலையாள நடிகரான சுராஜ் வீர தீர சூரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 3 பிஎச்கே, பறந்து போ வசூல் எவ்வளவு?

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்து... மேலும் பார்க்க

விம்பிள்டன் நாயகன்: ரோஜர் ஃபெடரரை முந்தி சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச் 14-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடர்ந்து புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள்.... மேலும் பார்க்க

வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். ... மேலும் பார்க்க

கார்த்தி - 29 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான பெயர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெளியீட்டில் தாமதமாக... மேலும் பார்க்க

தனுஷ் - 54 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாக... மேலும் பார்க்க