தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், சத்தியமூா்த்தி பவனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து கிரீஷ் சோடங்கா் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கிராம கமிட்டி அளவில் சீரமைப்பு செய்திருப்பது தமிழக காங்கிரஸில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸால் தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியும்.
தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த வகையிலான திணிப்பும் கூடாது என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாகும். மக்கள்தான் பிரதானம். மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய முடியும். தமிழகத்துக்கு எது நல்லது என்பதை பிரமதா் மோடி முடிவு செய்ய முடியாது. மொழித் திணிப்பதையும் நாங்கள் ஏற்பது இல்லை.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கிரீஷ் சோடங்கா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.