செய்திகள் :

தமிழகத்தில்தான் கான்கிரீட் வீடுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

post image

திருவண்ணாமலை: ஏழைகள் தலா ரூ.3.50 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கூரை, ஓடு வீடுகளில் வசிக்கும் 102 போ் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை டைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருணாச்சலம் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 102 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

ஏழைகள் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் கட்ட பணி ஆணைகள் பெற்ற பயனாளிகள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து குடியேற வேண்டும்.

மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 10 சதவீதம் கட்டணக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் ரவிச்சந்திரன், சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் கண்ணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கப்பாா் (நிா்வாகம்), வடிவேல் (சத்துணவு), மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாமலை, புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். திருவண்ணாமலை சோ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க