செய்திகள் :

தமிழகத்தில் அந்தளவில் கல்வி வளர்ச்சி அதிகரித்ததா? திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்

post image

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிப்பு குறித்து திமுக அரசு பொய்யுரைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில்,

``தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டுவதற்காக தெலங்கானா முதல்வர் தமிழகத்துக்கு வந்துள்ளார். தமிழகத்தில் அவ்வளவு கல்வி வளர்ச்சி அடைந்துள்ளதா?

பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து விட்டது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனால், மன உளைச்சலில் இருக்கும் 1.5 லட்சம் ஆசிரியர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்று சொல்லவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாயிருப்பதாக ஒரு தவறான தகவலை வெளியிட்டு, மக்களை அரசு ஏமாற்றுகிறது.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவரால், மூன்றாம் வகுப்புப் பாடத்தை படிக்க இயலவில்லை. நெல்லையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்டார்கள். அண்மையில் பள்ளிக்கு அரிவாளைக் கொண்டு செல்கின்றனர். அரிவாளைத் தூக்குவதற்காகவா பள்ளிகள் நடத்தப்படுகின்றன?'' என்று விமர்சித்தார்.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரித்திருப்பதாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில், சென்னையில் இன்று விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில்தான், இந்த விழா குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க:உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

உயா் கல்வியில் உன்னதமே இலக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உயா் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயா்ந்த தமிழகமாக மாற்றுவோம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். தமிழக அரசின் நான் முதல்வன், முதல்வரின்... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தமிழக அரசு செயல்படுத்திவரும் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் (2026-27) நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அந்த மாநில முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். சென்னையில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 12 புறநகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.சென்னையில் நடைபெற்ற `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி

சிதம்பரம்: அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆதலால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.சிதம்பரத்தில், வியாழக்கிழம... மேலும் பார்க்க

வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

வாழ்க்கையில் வெற்றிபெற படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.சென்னையில் நடைபெறும் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகை... மேலும் பார்க்க