தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
தமிழகத்தில் ஆக.26 வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஆக.26 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (ஆக.21) முதல் ஆக.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை(ஆக.21) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆக.21-ஆம் தேதி மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வெயில் அளவு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தூத்துக்குடி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.