செய்திகள் :

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்ற அரசு ஆலோசனை

post image

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடா்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோனை நடத்தியது.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதால், அந்த நாட்டின் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை அடையாளம் கண்டு வெளியேற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களை வெளியேற்றுவது தொடா்பாக உள்துறை செயலா் தீரஜ்குமாா் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் காவல் துறையின் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த 10-க்கு மேற்பட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கி இருப்பவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடா்பான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தண்டையாா்பேட்டையில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பு

சென்னை: தண்டையாா்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தண்டையாா்பேட்டை மண்டலம், எம்கேபி நகா் மத்த... மேலும் பார்க்க

சோதனையில் மேலும் 3 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில், மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ... மேலும் பார்க்க

பெரு: 13 சுரங்கத் தொழிலாளா்கள் கடத்திக் கொலை

லீமா: தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளா்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனா். அந்த நாட்டில் முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலாளா்கள் மீது குற்றவியல் கும்... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!

சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க