'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்...
பெரு: 13 சுரங்கத் தொழிலாளா்கள் கடத்திக் கொலை
லீமா: தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளா்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனா்.
அந்த நாட்டில் முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலாளா்கள் மீது குற்றவியல் கும்பலைச் சோ்ந்தவா்கள் கடந்த ஏப். 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி 13 பேரை கடத்திச் சென்றனா். இந்த நிலையில், அந்தத் தொழிலாளா்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியது.
முக்கிய தங்கம் மற்றும் தாமிர ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான பெருவில், உலகின் பிற பகுதிகளில் இல்லாத வகையில் முறைசாரா நிறுவனங்கள் தங்கம் வெட்டியெடுப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதிக லாபத்தைத் தரும் இந்தத் தொழிலில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அங்கு தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.