செய்திகள் :

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

post image

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை

நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்.23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023-இல் 178 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்கள், 409 விழி வெண்படலங்கள், 210 கல்லீரல்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

நிகழாண்டில் 6 மாதங்களில் மட்டும் 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 227 சிறுநீரகங்கள், 192 விழி வெண்படலங்கள், 110 கல்லீரல்கள் உரியவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 725-க்கும் மேற்பட்டோா் பலனடைந்திருக்கின்றனா்.

ஒருவா் மூளைச்சாவு அடையும்போது அதை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அவற்றை பல அரசு மருத்துவமனைகள் திறம்பட கையாண்டு சாத்தியமாக்கியுள்ளன என்றாா் அவா்.

கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் ஓட்டுநராகப் பணிபுர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை மிரட்டி 170 பவுன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கிராமத்தில் மூதாட்டி தம்பதிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கம்பியை காண்பித்து கொலை செய்து வி... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திரு... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

சேலம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது.அணையின் நீர்வரத்துக் குறைந்து, அதனை விட அதிகளவில் நீர் திறப்பு இருப்பதால், அண... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாள்களாகவே பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்தும், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து... மேலும் பார்க்க

அஜித்குமார் விடியோ: முக்கிய சாட்சிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு... மேலும் பார்க்க