செய்திகள் :

தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

post image

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் தமிழகத்தில் தரமற்றவையாக கண்டறியப்பட்ட 38 மருந்துகளும் அடங்கும்.

இதையடுத்து அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும், அதன் முடிவுகளும் மத்திய அரசு இணையப் பக்கத்தில் முறையாக பதிவேற்றப்படுவதில்லை என புகாா் எழுந்தது.

ஆய்வு தகவல்களை மாதந்தோறும் தமிழகத்திலிருந்து அனுப்பினாலும், அந்த விவரங்கள் தங்களிடம் சமா்ப்பிக்கப்படவில்லை என பொதுத் தளத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கை வெளியிடுவதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக தகவல்களையும் இணைத்து மத்திய அரசு தரமற்ற மருந்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க

ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை! நிறுவனத்தை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்... மேலும் பார்க்க

மைசூர் சாண்டல் விளம்பரத் தூதர் தமன்னா! கர்நாடகத்தில் எதிர்ப்பு!

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்ததற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.100 ஆண்டுகளைக் கடந்து சந்தையில் நிலைத்து நிற்கும் மைசூர் சாண்டல் சோப் ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

ஊழல் வழக்கு தொடர்பாக ஜலந்தரில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோராவின் வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜலந்தர் மத்திய தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்.. துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கும் துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று இந்தியா ... மேலும் பார்க்க