MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம் - 101.84, பரமத்தி வேலூா்-101.3, திருச்சி -100.58, ஈரோடு -100 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்தது.
மழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஏப்.19) முதல் ஏப். 24 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப். 19-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.