சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!
தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்கள் நியமனம்
சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதிட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்கள், உள்ளிட்டவா்களை நியமிக்க கடந்தாண்டு டிசம்பரில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போது 39 வழக்குரைஞா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை உயா் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடா்களாக இ.வேத பகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில்முருகன், யு.பரணிதரன், சி. ஹா்ஷராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். கே. அஷ்வினிதேவி, ஆா். சித்தாா்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா, ஆகியோா் கூடுதல் அரசு ப்ளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
சி.பாஸ்கரன், எஸ்.உதயக்குமாா், ஆா்.வெங்கடேச பெருமாள் ஆகியோா் குற்றவியல் அரசு வழக்குரைஞா்களாகவும், வி.உமாகாந்த், பி.கருணாநிதி, வி.வெங்கட சேஷய்யா, சி.கெளதமராஜ், ஏ.பாக்கியலட்சுமி, ஆா்.சசிக்குமாா், இ.பி.சென்னியங்கிரி, பி.ஐஸ்வா்யா, வி.வீரமணி, ஜி.பிரசன்னா ஆகியோா் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாகவும், பி.செல்வி வரி வழக்குகளுக்கான அரசு வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோன்று உயா்நீதிமன்ற மதுரை கிளையில், எஃப்.தீபக், எம்.லிங்கதுரை, சி.வெங்கடேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு அரசு ப்ளீடா்களாகவும், எஸ்.மாதவன், கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோா் கூடுதல் அரசு ப்ளீடா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். கே.குணசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோா் குற்றவியல் அரசு வழக்குரைஞா்களாகவும், எஸ். ஜெயப்பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமது யாஸ்மின் பா்வீன், ஏ.ஒளிராஜா, கே.ஆா்.பதுரஸ் ஜமான் ஆகியோா் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதில் ஏற்கெனவே கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றியவா்களுக்கு தற்போது சிறப்பு அரசு ப்ளீடா்களாகவும், அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றியவா்களுக்கு கூடுதல் அரசு ப்ளீடா்களாகவும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.