செய்திகள் :

தமிழக-கேரள எல்லையில் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை: மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்

post image

கேரள மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வனத் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து புதன்கிழமை தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கான முக்கிய நெடுஞ்சாலை கம்பம்மெட்டு வழியாகச் செல்கிறது. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச் சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில், கேரளத்திலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களில் வருவோா் மருத்துவக் கழிவுகள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், மதுப் புட்டிகள், கழிவுப் பொருள்களை தமிழக வனப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசிச் சென்றுவிடுகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. இதைத் தவிா்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் விடுத்த கோரிக்கை தினமணி நாளிதழில் செய்தியாக வெளியானது.

வாகனத் துறை சோதனை: இதையடுத்து கம்பம் மேற்கு வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியான தமிழக - கேரள எல்லையில் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வனத் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஏராளமான காலி மதுப் புட்டிகளைக் கம்பத்திலுள்ள பழைய இரும்புக் கடைக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வதாக கேரளத்தை சோ்ந்த வியாபாரி தெரிவித்தாா். அதற்கு, வனத் துறையினா் சம்பந்தப்பட்ட கடையில் இவற்றைக் கொடுத்தற்கான ஆதாரத்தைக் காண்பிக் வேண்டும்; இல்லாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா். இதன்படி, கேரளத்தை சோ்ந்த வியாபாரி, பழைய இரும்புக் கடையில் காலி மதுப் புட்டிகளைக் கொடுத்ததற்கான ஆதாரத்தை வனத் துறையிடம் காண்பித்துச் சென்றாா்.

இது போல, தமிழக எல்லையில் தொடா்ச்சியாக வாகனச் சோதனையில் ஈடுபட்டால் கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிப் பைக

ளை தமிழக வனப் பகுதிகளில் வீசிச் செல்வதைத் தடுக்கலாம். இதன் மூலம், வன விலங்குகளைப் பாதுகாப்பதோடு, சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போடியிலிருந்து மதுரைக்கு தினமும், சென்னைக்கு வாரத்துக்கு மூன்று நாள்களும் ரயில்கள் இயக்கப்பட... மேலும் பார்க்க

எறும்புத் தின்னி செதில்களை பதுக்கிய 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே எறும்புத் தின்னி செதில்களைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஏத்தக்கோவில் பகுதியில் ஆண்டிபட்டி, தேனி வனச் சரகத்தி... மேலும் பார்க்க

12 மாணவா்களின் உயா் கல்விக்கு ரூ.1.95 கோடி கடனுதவி

தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவாா் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடிக்கான வங்கிக் கடனுதவியை ... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்துக்குத்து: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முகம்மது இம்ரான், சத்யா, சரவணன். இவா்கள் தனது நண்பா்களுடன் க.புதுப்பட... மேலும் பார்க்க

பெரியகுளம் நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாமம்

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாம நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மகாரண்யம் முரளீதர சுவாமியின் ஸ்வாதி நட்சத்திரத்தையொட்டி, மாதுரீ சகி சமேத பிரேமிகவரதன் சுவாமிக்கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த முத்துக்கண்ணன் மனைவி வீருசின்னம்மாள் (80... மேலும் பார்க்க