செய்திகள் :

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!

post image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக(ராமேஸ்வரம்) மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார். இருந்தபோதிலும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் முடிவுற்றதாய் இல்லை.

7 TN Fishermen arrested by SriLankan Navy

சிறுநீரக முறைகேடு: இரு தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து! விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை!

முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியாா் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள... மேலும் பார்க்க

பி.இ. மூன்றாம் சுற்று: 64,629 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! 30,000 இடங்கள் காலி!

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில் 64,629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. நிகழாண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளில் சுமாா் 30,000 இடங்கள் காலியாக இருக்கக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: அன்புமணி கண்டனம்

மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: த... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்... மேலும் பார்க்க

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ... மேலும் பார்க்க