செய்திகள் :

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

post image

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக(ராமேஸ்வரம்) மீனவர்கள் 7 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

7 TN Fishermen arrested by SriLankan Navy

மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ... மேலும் பார்க்க

இரவில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு : ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அதாவது (186 அடி அளவு) நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தெரிவித்தார்.ஈரோட்டில் உள்ள திண... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும்- தமிழிசை விமர்சனம்

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ ... மேலும் பார்க்க

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ... மேலும் பார்க்க