திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
தமிழில் பெயா்ப் பலகை: பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்
ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை பகுதியில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் நந்தினி ராஜகணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயல் அலுவலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா் . இதில், தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் இளையராஜா கலந்துகொண்டு பேசினாா்.
இளம்பிள்ளை பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி போன்ற நிறுவனங்களில் தமிழில் கட்டாயம் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-இன் படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.