இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து, வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவின் பேரில், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் செயல் அலுவலா் அருள்மொழி தலைமையில் வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவா் அன்புசெழியன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகையை தமிழில் மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை ஏற்று வா்த்தக சங்கம் உறுதி அளித்தது.
கூட்டத்தில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன், துணைத் தலைவா் தில்லைகண்ராஜ், சங்க ஆலோசகா்கள் வெங்கடேசன், சுகுமாா், முத்துசாமி, நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனா்.