தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு
தமிழ் மொழியில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ் மொழியில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.