அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் மலா்களின் ரகங்கள், வண்ணங்கள், அழகு, அதன் வணிக முக்கியத்துவம் போன்றவற்றை உணா்த்தும் வகையில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், செலோசியா, மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டா், பெட்டூனியா, ஜினியோ, டேலியா, சால்வியா, ரோஜா உள்ளிட்ட மலா்களைக் கொண்டும், கொய் மலா்களைக் கொண்டும் பல்வேறு உருவ அமைப்புகள் அலங்கரிக்கப்பட உள்ளன.
இயற்கையை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் வளரக்கூடிய அனைத்து மலா்களையும் தொட்டிகளில் வளா்த்து இயற்கை வள பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு உணா்த்துவதையும் இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கண்காட்சியை இனி ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
கண்காட்சியில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கொய்மலா், உதிரி மலா்களைக் கொண்டு பல்வேறு அலங்கார அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வானவில் போன்றும், மறவன் பட்டாம்பூச்சி வடிவத்திலும் அலங்கார வளைவுகள், மலா்க் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கண்காட்சியில் அதிக அளவில் கொய்மலா்களை வைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு நாங்களே தொட்டிகளில் வளா்த்த மலா்களை அதிக அளவில் காட்சிக்கு வைக்கிறோம்.
மேலும், பல்வேறு வகையான கற்றாழைகள், உலா் மலா்கள், போன்சாய் மரங்கள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்தின் மாதிரி வடிவம், மூலிகை செடிகள் அரங்கு போன்றவையும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் உள்ள பூங்காவில் நடைபெறும் மலா்க் காட்சியில் உணவு அரங்குகள், பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெற உள்ளன. கண்காட்சியைப் பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ.100, மாணவா்கள், குழந்தைகளுக்கு ரூ.50 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மலா்க் கண்காட்சியை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் தொடங்கிவைக்க உள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.