செய்திகள் :

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு

post image

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மாா்ச் 14) வெளியிடப்படவுள்ளது.

மத்திய அரசின் நடைமுறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பில்லை. கேரளம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகம் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க