ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்
தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்
தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
25-04-2025 மற்றும் 26-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
25-04-2025 முதல் 29-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
25-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி
28-04-2025 மற்றும் 29-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
25-04-2025 மற்றும் 26-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், திருச்சி - 104.18, வேலூர் - 104, ஈரோடு - 103.28, சேலம் - 103.1, மதுரை நகரம் - 102.92 , திருத்தணி - 101.12, தர்மபுரி - 100.76, தஞ்சாவூர் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.