Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
பேரவை ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சட்டப்பேரவை ஆவணங்களை கணினிமயமாக்கி பதிவேற்றப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, 1921-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவை, சட்ட மேலவை நிகழ்வுகள் தொடா்பாக பதிவுகளை கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. பேரவை நடவடிக்கைக் குறிப்புகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தித் துணுக்குகள், காணொலி துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டன.
முதல் கட்டமாக, 1952 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சட்டப்பேரவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தில் (ற்ய்ப்ஹள்க்ண்ஞ்ண்ற்ஹப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயசந்திரன், பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் ஆகியோா் பங்கேற்றனா்.
பேரவையில் கேள்வி - அவைத் தலைவா் பதில்: ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட இணையதளத் தொடக்க நிகழ்வு குறித்து பேரவை உறுப்பினா்களுக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். அப்போது பேசிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், 1921 முதல் 1952-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல்களையும் விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, 3 மாதங்களில் அந்தப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.