Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்க...
`தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும்!'- ஸ்டாலின் கோரிக்கை என்ன?
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் மிகப்பெரிய சதியை ஒன்றிய அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்தி வரும் தென்மாநிலங்களில் மக்கள் அடர்த்தி குறைவு என்கிற பெயரில் தொகுதி எண்ணிக்கையை குறைக்க இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது இந்த ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நெரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்தினேன். இது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். விரைவில் நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம். இன்றைக்கு ஊட்டியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வேண்டிய காரணத்தால் பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் சதி திட்டத்தை தொடர மாட்டோம் என தமிழ்நாட்டு மண்ணில் நின்று உத்தரவாதம் தர வேண்டும் என கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.