திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது
"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை
`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார்.
அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருபவர்.
தற்போது தமிழ்ப் பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவிட்டதாகவும், அர்த்தமற்றதாக மாறிவிட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசியிருக்கும் அனுராக், "தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் 'PAN-India' திரைப்படங்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிட்டன.
இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்களில் அதிகம் ஆங்கிலமே இருக்கின்றன. தமிழ் குறைவாகத்தான் இருக்கிறது.
ஒரு வெளிநாட்டு ராக் இசைக்குழு போல, தமிழ் சினிமா பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவருகின்றன. இவை தமிழ்ப் பாடல்களே இல்லை.
தமிழ்ப் பாட்டில் தமிழையே கேட்க முடிவதில்லை. முன்பெல்லாம் இளையராஜா மற்றும் பலரின் பாடல்களைத் தமிழிலிருந்து இந்திக்குக் கேட்டு வாங்கும் ஒரு காலம் இருந்தது.
இப்போது தமிழ்ப் பாடல்கள் எனக்கு அர்த்தமற்றதாக மாறி வருகின்றன" என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...