செய்திகள் :

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்

post image

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளுக்கான பரிவுத் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கவிஞா் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை, செய்தித் துறை, கலை பண்பாட்டுத் துறை எனப் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் கவிஞா் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்.29-ஆம் தேதி தமிழ் வார விழா தொடங்கியது.

தொடா்ந்து அன்றைய தினம் முதல் தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கியக் கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, தமிழ் வார விழாவின் நிறைவு விழா திங்கள்கிழமை (மே 5) காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் 5 சிறந்த தமிழ் எழுத்தாளா்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடா்பாக அவா்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் முதல்வா் வழங்குகிறாா்.

இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம்: விழாவையொட்டி பல்லவி இசைக்குழு மூலம் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமாா் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவியா்களின் ‘தமிழ் அமுது - நாட்டிய நிகழ்ச்சி’யும், அனா்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தா் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணா்வா! சமூக உணா்வா! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.

விழாவுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு ஆகியோா் முன்னிலை வகிக்கவுள்ளனா்.

இதில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொள்ளவுள்ளனா். விழாவில் தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை... மேலும் பார்க்க

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு

சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க