செய்திகள் :

தரணி போற்றும் தைப்பூச வழிபாடு

post image

தை மாதத்தில், பூச நட்சத்திரத்தன்று பெüர்ணமியோடு சேர்ந்து வரும் நாள் தைப்பூச விழாவாகும். இந்த நாளில், மக்கள் புனித நீராடுவர். தேவாரங்களில் பூசம் தீர்த்தமாடும் பெருந்

திருவிழாவாகவும் குறிக்கப்படுகிறது. விளைபொருள்களை விவசாயிகள் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் நன்றி விழாவாகவும் கொண்டாடுகின்றனர்.

தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜரை ரணியவர்மன் எனும் மன்னன் தரிசித்ததும், சிவன் ஆனந்த நடனம் ஆடி காட்சி அளித்ததும், பதஞ்சலிக்கும் வியாக்கிரபாதருக்கும் காட்சி தந்ததும் இந்நாளில்தான்!

விருத்திராசுரனை தேவேந்திரன் கொன்றதால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீக்க, ஆந்திரத்தில் மல்லிகார்ஜுனம், திருவிடைமருதூரான மத்தியார்ஜூனம், புடார்ஜுனம் எனும் திருப்புடைமருதூர் ஆகிய மூன்று தலங்களிலும் தைப்பூசத்தன்று இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்து தீர்த்தவாரி செய்து தோஷம் நீக்கினர்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தைப்பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் தெப்பம் நடைபெறும்போது, அம்மனும் சுவாமியும் அங்கு சென்று கோயிலுக்குத் திரும்பும்வரை நடை சாற்றப்பட்டிருக்கும்.

சென்னை மயிலாப்பூரில் ஞானசம்பந்தர், "தைப்பூசத் திருவிழாவைக் காணாமல் போகிறாயா?' என்று பாடி பூம்பாவாயை உயிரோடு எழுப்பிய அற்புதமும் நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும் தெப்பத் திருவிழா நடைபெறும்.

திருமாலை காவிரி கண்ணாரக் கண்டு தரிசித்த நாளாதலால் திருச்சேரை பிரம்மோற்சவத்தில் சாரநாதப்பெருமாளின் திருத்தேர் தைப்பூசத்தில் நடக்கிறது.

தை வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் வள்ளலார் ஐக்கியமானதால், "இறைவன் ஒளிமயமானவன்' என்பதை உணர்த்த வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஞான சபையில் தைப் பூசத்தன்று அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை அழிக்கும் வகையில், சிவன் உருவாக்கிய தெய்வமான முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

மார்கழி துவக்கத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள், முருகன் திருப்புகழ் பாடல்களை பாராயணம் செய்து ஆறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரை செய்து தைப்பூசத்தன்று விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

தைப்பூசத்தன்று பழனி முருகனுக்கு சர்க்கரைக்காவடி, தீர்த்தக்காவடி, பறவைக்காவடி, பால்காவடி, மச்சக்காவடி, மயில்காவடி, சர்ப்பக்காவடி உள்ளிட்ட பல காவடிகளை பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். பழனிக்கு காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் "காவடிசிந்து' என்று அழைக்கப்படுகிறது.

பழனியில் பத்து நாள் தைப் பூச விழாவின் ஏழாம் நாள் தேரோட்டமும்,

பத்தாம் நாள் தெப்போற்சவமும் நடைபெறுகின்றன.

வெளிநாடுகளில்...: "முருகன் மணம் முடித்தது கதிர்காமத்தில். எனவே, முருகன் ஈழத்து மாப்பிள்ளை' என்கின்றனர் இலங்கைத் தமிழர்கள். தைப்பூசத்தன்று அறுத்த புத்தரிசி, பசும்பாலுடன் கலந்து வாழைப்பழ துண்டுகள் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும், காவடிகளை எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

மலேசியாவின் ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோயிலிலும் விழா சிறப்பாக நடைபெறும்.

மலேசியா பத்துமலை கோயில் தைப்பூச விழாவுக்கு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிலிருந்து 8 மணி நேரம் நடந்து வந்து காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் மாநகர தண்ணீர்மலை கோயிலில் தைப்பூசத்தை மூன்று நாள்கள் தமிழர்களும் சீனர்களும் கொண்டாடுகின்றனர். தைப்பூசத்துக்கு பினாங்கு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் முருகன் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். முருகன் வெள்ளித் தேரில் ஊர்வலமாகச் சென்று திரும்புவார். சீனர்களும் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

ஆப்பிரிக்காவுக்கு அருகேயுள்ள மொரீஷியஸில் தமிழர்கள் தைப் பூசத்தை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தென்னாப்பிரிக்கா பிஜி தீவுகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தைப் பூசம் பிப்ரவரி 11}இல் வருகிறது.

} இரா.இரகுநாதன்

தேர்வு பயம் தீர...

திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்... மேலும் பார்க்க

அருள் தரும் முருகன்

உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சோழர்கள் ஆண்டபோது வன விலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது. வயலூரில் விலங்குகளை சிலர் வேட்டையாடியபோது, தாகம் ஏற்பட்டது. அங்கு மூன்று கிளையாக இருந்த கரும்பை அவ... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 7 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)திறமையும் தன்னம்பிக்... மேலும் பார்க்க

பிள்ளைப் பேறு கிடைக்க...

யமுனை நதிக்கரையில் வேதபுரத்தில் கருத்தமன் என்ற முனிவர் பிள்ளைப் பேறு இல்லாமல், சிவனை பிரார்த்தித்தார். குழந்தை பிறந்தபோது, "புண்டரீகர்' எனப் பெயரை முனிவர் சூட்டினார். பல்வேறு இடங்களில் உள்ள சிவத் தலங்... மேலும் பார்க்க

குறைகள் தீர....

சோழ மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட குறை நீங்க, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் பலன் கிட்டவில்லை. அவரது கனவில் திருமால் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருவூரகப் பெருமாளாக அருள் செய்வதாகவு... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும்...

அசுரர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க, பரிகாரம் கேட்டார் முருகன். அப்போது, "கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும... மேலும் பார்க்க