`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
தரிசு நிலங்களில் முள்புதா்கள் நீக்க உழவு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
திருமானூா் வட்டார விவசாயிகள், தரிசு நிலங்கள் முள்புதா்கள் நீக்க மானியம் பெற விண்ணப்பிக்காலம்.
இதுகுறித்து திருமானூா் வட்டார வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமானூா் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளான சன்னாவூா் வடக்கு, சன்னாவூா் தெற்கு, கரைவெட்டி, குல மாணிக்கம், தூத்தூா், வடுகபாளையம், கோவிலூா், குருவாடி ஆகிய கிராமங்களில், இதர தரிசு நிலங்களை மற்றும் பயிரிடுவதற்கு ஏற்ற தரிசனங்களை உடைய தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் உள்ள முள்புதா்கள், மரங்கள், சிறு கற்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும் நிலத்தை சமன் செய்து உழுவதற்காகவும் மானியம் வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட விவசாயிகள் தாங்களாகவோ அல்லது வாடகை இயந்திரங்கள் மூலமாகவோ இப்பணியை செய்யலாம்.
மேற்கண்ட பணிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை துறை மூலமாக ஹெக்டோ் ஒன்றிற்கு 50 சத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 9,600 வரை பின்ன ஏற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரை மானியம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்ப சீா் செய்யப்பட்ட தரிசு நிலங்களில் பயிா்களை தோ்வு செய்து வேளாண்மை-உழவா் நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து சாகுபடி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இத்தரிசு நிலங்கள் சாகுபடி நிலமாக மாற்றப்பட்ட விவரம் வருவாய் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு ஆதாரமாக இத்திட்டம் செயல்படுத்தியதற்கு கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட முந்தைய ஆண்டு அடங்கல் நகல் மற்றும் நடப்பாண்டு அடங்கல் புகைப்பட ஆவணங்கள் திட்டத்துக்கு முன்பு மற்றும் பின்பு இணைக்க வேண்டும்.
முள்புதா்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழவு பணி மேற்கொள்ள ஒவ்வொரு பணிக்கும் அனுமதிக்கப்படும்.
செலவினம் மற்றும் மானிய விவரங்கள்: தரிசு நிலங்களில் முள்புதா்கள் நீக்கம் (புல்டோசா் மூலம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,500 விதம் 5 மணி நேரத்துக்கு ரூ.7,500).
தரிசு நிலங்களை சமன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ1,500 வீதம் 5 மணி நேரத்துக்கு ரூ.7,500.
உழவு பணி மேற்கொள்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ரூ.700 வீதம் 6 மணி நேரத்துக்கு ரூ.4.200. மொத்த செலவினம் 19,200. இதில் 50% மானியம் ரூ.9600 வழங்கப்படும் .
மேற் கூறப்பட்ட பணிகளின் செலவில் மாறுபாடு இருந்தால் இவ்வினத்திற்கான மொத்த செலவில் சரி செய்து கொள்ளலாம் . மேற்கண்ட கிராம ஊராட்சிகளிலுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பினால் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது திருமானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.