இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!
தருமபுரியை குளிா்வித்த திடீா் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. புதன்கிழமை காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து, சில்லென்ற காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
தருமபுரி நகா் மற்றும் இண்டூா், நல்லம்பள்ளி, பென்னாகரம், ஒட்டப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. தொடா்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.