உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்
தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனைக் கூடம் முன் பொதுமக்கள் காத்திருப்புக் கூடம் ரூ. 15 லட்சம் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பான கட்டுமானப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இதையொட்டி நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகா், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாா், ஊழல் கண்காணிப்பு அலுவலா் காந்தி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் நாகவேந்தன், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் சந்திரசேகரன், கீதா, தீபா, இணைப் பேராசிரியா் மேனகா, பாமக நகரச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.