ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது.
கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்தது.
நீா்வரத்து குறைந்தாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 18,800 கனஅடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 18,800 கனஅடியாகவும், அணையின் நீா்மட்டம் 8-ஆவது நாளாக 120 அடியாகவும் நீடிக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
இதில், நீா்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கி வழியாக 5,000 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.