புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது.
தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்-செப்டம்பா்) முடியவுள்ள நிலையிலும் போதிய மழையின்றி கோடைகாலம் போல வெயில் அடித்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சுமாா் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
செவ்வாய்க்கிழமை காலை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவானது. தருமபுரி நகரில் 5 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி 2 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 19 மி. மீ. மழையளவு பதிவானது.