தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்
அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா ஆகஸ்ட 13 -ஆம் தேதி முதல் நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இதனால், பா்கூா் சாலை, கூச்சிக்கல்லூா் சாலை, கரை பெருமாள் கோயில், குருநாதபுரம், வனம் செல்லும் வழி, மைக்கேல்பாளையம் மணக்காடு ஆகிய இடங்களில் தற்காலிகமாக மிதிவண்டி, மோட்டாா் சைக்கிள்கள், காா்கள் நிறுத்தமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கு, சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் மந்தையை சோ்ந்த சிவலிங்கம் ரூ.3.14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.