செய்திகள் :

தலைமைச் செயலகத்தில் முதல்வர்! அவசர ஆலோசனை!

post image

சென்னை தலைமைச் செயலகம் விரைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு விரைந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுமாறு உத்தரவிட்டார்.

நாளை கரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்.

Chief Minister at the Secretariat - Emergency Meeting with ministers

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசலில் பலி 31-ஆக உயர்வு! -செந்தில் பாலாஜி

கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: கரூரில் பி... மேலும் பார்க்க

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந... மேலும் பார்க்க

தவெக கேட்டதைவிட பெரிய இடமே கொடுக்கப்பட்டது! டிஜிபி விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.கரூரில் தவெக விஜய்... மேலும் பார்க்க

பயிா் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பயிா் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ வேளாண் விற... மேலும் பார்க்க

முழு ஒத்துழைப்பு தேவை: துணை முதல்வா் உதயநிதி

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தை எதிா்கொள்ள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தேவை என அனைவரையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்

சென்னை சேத்துப்பட்டில் இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்ட வழக்கில் 3 போ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா். சேத்துப்பட்டு மேத்தா நகா் கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க