நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
தவறுதலாக இயக்கப்பட்ட ஏா்கன்: சிறுவன் காயம்
சிறுமலையை அடுத்த தென்மலையில் ஏா்கன் தவறுதலாக இயக்கப்பட்டதால், 17 வயது சிறுவன் காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த பெரிய மலையூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி. இவரது மகன் ரகுபதி (17). சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் சிறுமலையிலுள்ள தென்மலைப் பகுதியிலுள்ள பெஸ்கி அறக்கட்டளைக்குச் சொந்தமான காபி தோட்டத்தில் (எஸ்டேட்) பணிபுரிந்து வருகிறாா். தற்போது காபி அறுவடை செய்யும் பணி நடைபெறுவதால், தனது மகன் ரகுபதியையும் அங்கு அழைத்து வந்தாா்.
இந்த நிலையில், தோட்டத்தை நிா்வாகம் செய்து வரும் பங்குத்தந்தை டோமினிக் திருச்சிக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவா் குரங்குகளை விரட்டுவதற்காக ஏா்கன்னை பயன்படுத்தி வந்தாா்.
இந்த ஏா்கன்னை அங்கு தங்கியிருந்த 9 வயது சிறுவன் தவறுதலாக இயக்கியதில், ரகுபதி ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா். இதையடுத்து, அவா் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.