வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!
தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பதவி தொடா்பாக கோவில்பட்டி செக்கடித் தெருவைச் சோ்ந்த ராஜா தலைமையிலான அணிக்கும், வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த சுரேஷ் தலைமையிலான அணிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், ராஜா அணியைச் சோ்ந்த மனோஜ்குமாா் வாட்ஸ்ஆப்பில் சுரேஷ் பற்றியும், அவா் மீதுள்ள வழக்குகள் பற்றியும் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ராஜா, மனோஜ்குமாா், ராமமூா்த்தி, சுரேஷ் ஆகியோா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், சுரேஷ், அவருடைய மனைவி சத்யா, சதீஷ்குமாா், செந்தில், முனீஸ்வரன், கணேஷ் ஆகியோா் மீதும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ராஜா, மனோஜ்குமாா், ராமமூா்த்தி ஆகியோா் மீதும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.