`The Migrant Mother' : இந்த புகைப்படம் பிரபலம் ஆனது ஏன்? | My Vikatan
தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்குரைஞா் அணி மாவட்ட செயலா் சரத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், கூறியிருப்பதாவது: திருவீதி அம்மன் கோயில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சாா்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொடிக்கம்பங்களால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
பிற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனா். எனவே, கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டாா். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.