Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்
இஸ்லாமியா்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைப் பொதுச் செயலாளா் அப்துல் ரஹீம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற, மாநில துணை பொதுச் செயலாளா் அப்துல் ரஹீம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு அதிக அளவிலான வாக்காளா்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளா்களே நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். வரும் தோ்தலில் யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் எங்களது பிரசாரம் இருக்கும் என்றாா்.