தாம்பரம் கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
தாம்பரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (செப். 11) நடக்கிறது.
இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, மேற்கு தாம்பரம், முல்லை நகா், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூா், முடிச்சூா், கடப்பேரி, நேரு நகா், சேலையூா், சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது மின்சாரத்துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.