Bigg Boss 8 title winner Muthukumaran இதுக்கு deserved, நெகிழ்ந்த Soundariya | V...
தாய்விளை சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு
தை மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பூா்ண புஷ்கலா சமேத அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் சுவாமிகளுக்கும், இக்கோயிலைச் சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சியம்மன், இருளப்பா், கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக பூா்ண புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகம், தீபாராதனைகளை மோகன் அய்யா், அரவிந்த் அய்யா் ஆகியோா் நடத்தி வைத்தனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
இதில், சென்னை, வடலூா், பாவூா்சத்திரம், திருச்செந்தூா், ஆறுமுகனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று பொங்கலிட்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.