Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
திட்டக்குடி: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்!
நெய்வேலி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை தடுப்புச் சுவற்றில் மோதி வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
திட்டக்குடி வட்டம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா (36), கள்ளக்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர். அதே வங்கியில் பணியாற்றுபவர்கள் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கேசவன்(26), நேரு மகன் சசிகுமார் (27), ரமேஷ் மகன் அருண்குமார் (25).
இவர்கள் அனைவரும் பணிக்குச் செல்ல திட்டக்குடியில் இருந்து வியாழக்கிழமை காலை 4.30 மணியளவில் மேலாளர் ராஜா காரில் புறப்பட்டனர். காரை ராஜா ஓட்டினார். மற்றவர்கள் அமர்ந்துச் சென்றனர். கார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
விபத்து தொடர்பாக உடனடியாக ஹைவே பெட்ரோல் சம்பவம் இடத்திற்கு சென்று, வேப்பூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். வங்கி ஊழியர்கள் நான்கு பேரும் மாற்று வாகனம் மூலம் கள்ளக்குறிச்சி சென்றனர்.