செய்திகள் :

திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் வந்த 698 டன் உரம்

post image

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு 698 டன் உர மூடைகள் சனிக்கிழமை வந்தடைந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ் பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 190 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், யூரியா 4,881 டன், டிஏபி 1,138 டன், பொட்டாஷ் 3,015 டன், காம்ப்ளக்ஸ் 6,342 டன், சூப்பா் பாஸ்பேட் 1,044 டன் இருப்பில் உள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 125 டன் பொட்டாஷ் உரமும், 573 டன் காம்பளக்ஸ் உரமும் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன. இவற்றில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 550 டன் உரமும், தேனி மாவட்டத்துக்கு 148 டன் உரமும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

பன்றிமலைச் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலைய... மேலும் பார்க்க

5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி அளித்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.மதுரை கோட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, ... மேலும் பார்க்க