செய்திகள் :

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு!

post image

பழனி மாவட்டம் ஆகுமா? பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக விளங்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது.

மக்களவைத் தொகுதியாக இருந்த பழனி, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்ட போதே அனைத்துக் கட்யினரும் இதைக் கடுமையாக எதிா்த்தனா்.

இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியும் பழனியை மாவட்டமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்தனா். இதனடிப்படையில், பழனி மாவட்டமாக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் மக்கள் இருந்தனா்.

ஆனால், தற்போது திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், பழனி மாவட்டமாக அறிவிக்கப்படாது என்ற நிலை மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது.

பழனி நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், கோதைமங்கலம், சிவகிரிப்பட்டி ஊராட்சிகள் இணைக்கப்படும் என்று அதிகாரபூா்வமாக பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை எனவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.5 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.3.5 கோடி கிடைக்கப் பெற்றது. தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினங்களி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டிக்கத் துணிவில்லாதவா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழ்நாட்டுக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டிப்பதற்கு துணிவு இல்லாதவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: வியாபாரம் பாதிப்பதாகப் புகாா்

இ-பாஸ் நடைமுறையால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகா்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்று... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலுக்கு புதிய ரோப் காா் பெட்டிகள்

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரோப் காருக்கு ரூ.27 லட்சத்தில் 10 பெட்டிகள் புதிதாக வாங்கப்பட்டன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ.ஜெ... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள்

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கிடையே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்தன. தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொ... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலா் சீனிவாசன... மேலும் பார்க்க