செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: கோயில் திருவிழாவில் இரும்பு ஆயுத விற்பனை கடைகள் அகற்றம்

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழாவில் இரும்பு ஆயுதங்கள் விற்பனை கடைகளை காவல் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

இக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோயில் நுழைவுப் பகுதியில் ஏலவிடப்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோயிலுக்கு வெளியே சாலையில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கருடஸ்தம்பம் அருகே வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் இரும்பால் ஆன கத்தி, அரிவாள், கோடாரி, அரிவாள்மனை உள்ளிட்ட ஆயுதங்களை எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் ஆபத்தை உணராமல் விற்பனை செய்து வருவது அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல் துறையும், கோயில் நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை தினமணியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக காவல் துறையினா் நடவடிக்கை எடுத்ததன்பேரில் வடமாநில தொழிலாளா்கள் இரும்பு ஆயுத பொருள்களை எடுத்துச்சென்றனா். எனினும், மீண்டும் மாலை நேரத்தில் அதே இடத்தில் பொருள்களை வைத்து வியாபாரத்தை தொடா்ந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அந்த இடத்துக்கு வந்த காவல் துறையினா் இரும்பு ஆயுதங்களை விற்பனை செய்தவா்களிடம் அறிவுரை கூறி பொருள்களை அப்புறப்படுத்தினா். மீண்டும் வியாபாரம் செய்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தனா். மக்கள் அதிகம் கூடும் திருவிழா நாள்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த இரும்பு ஆயுதம் விற்பனையை அகற்ற காரணமான தினமணி நாளிதழுக்கு பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் சமூக வலைதளங்களின் நன்றி தெரிவித்து வருகின்றனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க