படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மகளிரணியை பிசிசிஐ இன்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய மகளிரணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இதையும் படிக்க: ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!
இந்திய மகளிரணி அறிவிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியை ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அணியின் துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
— BCCI Women (@BCCIWomen) April 8, 2025
India’s squad (Senior Women) for Women’s Tri-Nation ODI series against Sri Lanka and South Africa announced.
All The Details #TeamIndiahttps://t.co/lcHoriAOScpic.twitter.com/zYBYCaj43D
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), பிரதீகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கௌர், கஷ்வி கௌதம், ஸ்நே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னிஸ், ஸ்ரீ சரணி, சுச்சி உபத்யாய்.