படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
152 நாள்களில் முடிவடைந்த ரஞ்சனி தொடர்! காரணம்?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த ரஞ்சனி தொடர் 152 நாள்களில் நிறைவடைந்துள்ளது.
ஆண் - பெண் நட்பை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடர், இளம் ரசிகர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், குறுகிய காலத்தில் நிறைவு பெற்றுள்ளது.
5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் திருப்பங்களுடன் ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
இத்தொடரில் நடிகை ஜீவிதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக சந்தோஷும் நடித்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி கிரிஷ், சுதர்சனம், சரத்குமார், சல்மான், ரஞ்சனி போன்ற துணைப் பாத்திரங்களின் நடிப்பும் தொடருக்கு நிலையான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் கதைக்கு வலு சேர்த்துவந்த ஜீவிதா, சமூக வலைதளத்திலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் குறும்புத்தனங்களையும் கொண்டாட்டங்களையும் ரசிகர்களுடன் பகிர்வதிலும், ரஞ்சனி தொடர் பார்வையாளர்களுக்கு நெருக்கமானது.

இதனிடையே 5 நண்பர்களில் ஒருவரான சந்தோஷை, கரம் பிடிக்கும் சூழலைப் போராடி ரஞ்சனி வென்றதாக இத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது.
பகையை வெல்லும் பேராயுதம் அன்பு மட்டுமே என்பதையே கதையில் கருவாகக் கூற விரும்பியதால், குறுகிய காலமாக ஒளிபரப்பாகியிருந்தாலும், கதையின் அடர்த்திக்காக தொடர் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் இருந்து மீண்டும் மற்றொரு தொடர் ஒளிபரப்பாக வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது. இத்தொடரின் இறுதிக் காட்சி படங்களை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பாண்டியன் ஸ்டோர் -2 சீரியலில் சக்திவேல் தொடர் நடிகர்!