செய்திகள் :

சினிமாவில் பான் இந்தியா கலாச்சாரம் அசிங்கமானது: செல்வராகவன்

post image

இயக்குநர் செல்வராகவன் புதிய திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

முக்கியமாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய செல்வராகவன், “100 நாள்கள் ஓடிக்கொண்டிருந்த படங்களெல்லாம் இப்போது 3 நாள்களில் முடிந்து விடுகின்றன. மிக சுலபமாக ஒரு படத்தைக் குதறி, எங்களின் வாழ்க்கையையே காலி செய்கிறார்கள். இப்போது, பான் இந்தியா என்கிற அசிங்கமான கலாச்சரம் வந்ததால் நல்ல சினிமா என்பதற்கான எல்லா வரையறைகளும் குறைந்து குத்துப் பாட்டுகள் கொண்ட கமர்சியல் படங்களே அதிகரித்துள்ளன. இதனால், ரசனையே இல்லாத இடம் நோக்கி நகர்கிறோம்.

எப்போது இறுதியாக ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என நினைத்துப் பாருங்கள். இன்று நல்ல படங்களை எடுக்க வந்தால் காணாமல் போய்விடுவோம் என்கிற எண்ணம் இருப்பதால் பலரும் கமர்சியல் பக்கம் திரும்பி விடுகின்றனர். ரூ. 1000 கோடி வசூலில்தான் கவனம் செலுத்துகின்றனர். நல்ல சினிமாக்கள் செத்தே விட்டன. கோபத்தில் சொல்லவில்லை, ஆதங்கத்தில் சொல்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!

அரையிறுதியில் பாா்சிலோனா, பிஎஸ்ஜி

டாா்ட்மண்ட்/பா்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பாா்சிலோனா - போருசியா டாா்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. இதில் பாா்சிலோனா - ப... மேலும் பார்க்க

காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்

பாா்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி சாம்பியன்...

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 15-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் வாகை சூடிய பஞ்சாப் அணியினா். இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 4-1 கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. 3-ஆவது இடத்துக்க... மேலும் பார்க்க

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!

நடிகை ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.மாடலிங் துறையில் 100-க்கும் விளம்பரங்களில் நடித்து பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த நடிகை ஜன... மேலும் பார்க்க

ஜிங்குச்சா... தக் லைஃப் முதல் பாடல் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. நடிகர்க... மேலும் பார்க்க