உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?
இங்கிலாந்தைச் சேர்ந்த டெபி என்ற பெண் தினமும் தனது கணவர் ஸ்டீவ் என்பவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஸ்டீவ் எதர்ச்சையாக ஒருமுறை, தான் உண்மையாக இருப்பதை நிரூபிக்க பொய் கண்டறியும் சோதனைக்கு தயார் என்று கூறியிருக்கிறார். ஸ்டீவ் சாதாரணமாக சொன்னதை, டெபி நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் உடனடியாக ஒரு பொய் கண்டறியும் இயந்திரத்தை வாங்கி அதனை செயல்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இதற்கு காரணம் என்ன?
தொலைதூர உறவு குறித்த பதற்றமும், கடந்த காலத்தில் அனுபவித்த வேதனையான அனுபவங்களும் இணைந்து டெபியை இவ்வாறு செய்ய தூண்டுவதாக அவர் கூறுகிறார். டெபியும் ஸ்டீவும் டேட்டிங் செய்ய தொடங்கியபோது, வெவ்வேறு நகரங்களில் வசித்திருக்கின்றனர்.
ஸ்டீவ் அவர்கள் உறவு உறுதியாவதற்கு முன், வேறு ஒரு பெண்ணுடன் சிறிது காலம் உறவில் இருந்ததாக டெபிக்கு தெரியவந்ததையடுத்து அவர் மீது சந்தேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்.
அவர் ஸ்டீவின் வங்கி ஸ்டேட்மெண்ட், தொலைபேசி பதிவுகள் என அனைத்தையும் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு ஸ்டீவ் கண் சிமிட்டினால் கூட, டெபி அவரை விசாரணை செய்வாராம்.
ஸ்டீவின் பொறுமையான மற்றும் அமைதியான அணுகுமுறை, இவர்களின் உறவை ஒன்றாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகுத்திருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் இயல்பாகவே நேசிக்க தொடங்கியுள்ளனர். டெபியும் மாற தொடங்கியிருக்கிறார்.
பொய் கண்டறியும் இயந்திரம், தினசரி பயன்பாட்டில் இருந்து, அரிதாக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மாறியது.
இது குறித்து டெபி கூறுகையில் ”பொறாமை எங்கள் உறவை கிட்டத்தட்ட அழித்துவிட்டது. ஆனால் எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. பொய் கண்டறியும் இயந்திரம் கடந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இனி அது எங்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தாது” என்று கூறியிருக்கிறார்.