செய்திகள் :

வெறும் 1,592 ரூபாய்க்கு திருமணம் செய்த மணமக்கள்; கவனம் பெற்ற ராஜஸ்தான் தம்பதி - எப்படி தெரியுமா?

post image

ராஜஸ்தானைச் சேர்ந்த கமல் அகர்வால் மற்றும் அவரது நீண்டநாள் காதலி ரூச்சி, பிரமாண்டமான திருமண விழாக்களைத் தவிர்த்து, எளிமையான நீதிமன்றத் திருமணத்தை மேற்கொண்டு இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளனர்.

பல லட்சங்கள் செலவு செய்து நடைபெறும் திருமணங்களுக்கு மத்தியில், இவர்களது திருமணம் வெறும் 1,592 ரூபாயில் நிறைவடைந்ததுள்ளது.

Rep image

கமல் தனது ரெடிட் பதிவில், தனது அண்ணனின் “எளிமையான” திருமணத்தைக் கண்டு, இதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.

அவரது வலைப்பதிவின்படி, இந்தத் தம்பதி ஏப்ரல் 17, 2025 அன்று திருமண அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பித்து, மே 28 அன்று பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் சமீபத்திய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர்களது திருமணத்திற்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் சில முத்திரைத் தாள்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன.

ஆடம்பர உடைகள் போன்றவற்றைத் தவிர்த்த இவர்கள், மே 28 அன்று திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். முத்திரைத் தாள்களுக்கு ரூ.320, நோட்டரிக்கு ரூ.400, அவசர புகைப்படங்களுக்கு ரூ.260, அறிவிப்புப் படிவ அச்சிடலுக்கு ரூ.290 என அந்த திருமணத்திற்காக அவர்கள் செலவு செய்த 1,592 ரூபாய் குறித்தும் அவர்கள் விவரித்துள்ளனர்.

இவர்களது 1,592 ரூபாய் திருமணம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

MrBeast: 40 கோடி சந்தாதாரர்கள்; நேரில் வாழ்த்திய யூடியூப் CEO; யார் இந்த 'மிஸ்டர் பீஸ்ட்' ஜிம்மி?

யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட் (Mr.Beast) சேனலை நடத்தி வரும் பிரபல யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன். இதனைக் கௌரவிக்கும் விதமாக யூ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``அரசு திட்டங்களை சமூக ஊடகங்களில் விமர்சிக்கக்கூடாது'' - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?

இங்கிலாந்தைச் சேர்ந்த டெபி என்ற பெண் தினமும் தனது கணவர் ஸ்டீவ் என்பவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.ஸ்டீவ் எதர்ச்சையாக ஒருமுறை, தான் உண்மையாக இருப்பத... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: `விரும்பித்தான் சென்றோம்’ - பெண்கள் ; மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்... மேலும் பார்க்க

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூரின் ரூ.30000 கோடி சொத்தில் கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு பங்கு கிடைக்குமா?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு த... மேலும் பார்க்க