பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
திபெத்: திபெத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9.27 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .