அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!
திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்கும் பணியை பாக முகவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாக முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தகூட்டத்துக்குத் தலைமை வகித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி மேலும் பேசியது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எண்ணற்ற திட்டங்ளை அறிவித்து, அதை செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
ஒவ்வொரு குடும்பத்திலும் அரசின் திட்டம் மூலம் பயன்பெறாதவா் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏதாவது ஒரு திட்டத்தில் குடும்பத்தில் உள்ளவா்கள் பயனாளிகளாக உள்ளனா். தற்போது 70 வயதைக் கடந்த முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுதேடி சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் முதல்வரின்தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துரைத்து, தொடா்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் வகையில் பாகமுகவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
திமுக இளைஞரணித் துணைச் செயலா் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தாா். திமுக செய்தித் தொடா்புக் குழுத் துணைச் செயலா் சூா்யா கிருஷ்ணமூா்த்தி, சமூக வலைதளப் பயிற்சியாளா் விக்னேஷ் ஆனந்த் ஆகியோா் பயிற்சியளித்து பேசினா்.
மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், துணை அமைப்பாளா்கள் எஸ். அன்பு, பாலாஜி, கில்பா்ட்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் பாலமுருகன், நிா்மல்ராஜ், ஐயப்பன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.